உலக பாட்மின்டன் தொடரில் வெண்கலம் வென்ற சாத்விக்-சிராக். இந்தியாவுக்கு கிடைத்த 15வது பதக்கம்.
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில், ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் சென் போ யாங், லியு யி ஜோடியை எதிர் கொண்டது
ஒரு மணி நேரம், 7 நிமிடம் நீடித்த போட் டியில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 19-21, 21-18, 12-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெண்கலப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தது. இது, உலக பாட்மின்டன் அரங்கில் சாத்விக், சிராக் ஜோடி கைப்பற்றிய 2வது பதக்கம். ஏற்கனவே 2022ல் வெண்கலம் வென்றிருந்தது.இதுவரை ஒரு தங்கம், 4 வெள்ளி, 10 வெண்கலம் கிடைத்துள்ளது.
0
Leave a Reply